ஒருபோதும் மன்னிப்பு கேட்க மாட்டேன்: ஆசிய கோப்பையை தர புதிய நிபந்தனை விதித்த பாகிஸ்தான் மந்திரி
துபாய், துபாயில் நடந்த 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி பரிசுக் கோப்பையை வழங்க இருந்தார். ஆனால் அவரிடம் இருந்து கோப்பையை வாங்கமாட்டோம் என்று இந்திய அணி மறுத்து விட்டது. அவருக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரிய துணைத் தலைவர் கலீத் அல்ஜரூனிடம் இருந்து பெற்றுக்கொள்கிறோம் என்று இந்திய அணி கூறியது. ஆனால் இதனை ஏற்க மறுத்த மொசின் நக்வி கோப்பையை தன்னோடு எடுத்து கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினார். இதனால் இந்திய அணிக்கு கோப்பை வழங்கப்படவில்லை. வெறுங்கையுடன் வெற்றியை கொண்டாடினர். இந்த நிலையில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் ஆண்டு பொதுக்குழு கூட்டம் துபாயில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரதிநிதிகளாக துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, முன்னாள் பொருளாளர் ஆஷிஷ் ஷிலார் ஆகியோர் கலந்து கொண்டு கோப்பை பிரச்சினையை எழுப்பினர். அப்போது வெற்றி பெற்ற அணியிடம் கோப்பையை வழங்க வேண்டும். இது ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கோப்பையாகும். தனிப்பட்ட நபருக்கு சொந்தமானது கிடையாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். ஆனால் மொசின் நக்வி கோப்பையை வழங்கமாட்டோம் என்ற முடிவில் இருந்து பின்வாங்கவில்லை. இதனால் இந்த கோப்பை இந்தியாவுக்கு எப்போது வரும் என்பதில் நிச்சயமற்ற நிலை நீடித்து வந்தது. ஆசிய கோப்பையை இந்தியாவுக்கு அனுப்புமாறு இந்திய கிரிக்கெட் வாரியம் வலியுறுத்திய நிலையில், போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக கிரிக்கெட் வாரியத்திடம் மொசின் நக்வி, கோப்பையை ஒப்படைத்ததாக தகவல் வெளியாகி இருந்தது.இந்நிலையில் ஆசிய கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திடம் ஒப்படைத்ததாக வெளியான தகவலுக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவரும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மனும், பாகிஸ்தான் உள்துறை மந்திரியுமான மொசின் நக்வி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் ஆசிய கோப்பையை பெற இந்தியாவுக்கு பாகிஸ்தான் மந்திரி புதிய நிபந்தனை ஒன்றையும் விதித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், “ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக, கோப்பையை இந்தியாவிடம் தர தயாராகவே உள்ளேன். கோப்பையை பெற பி.சி.சி.ஐ. (BCCI) ஆர்வமாக இருந்தால் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ACC) அலுவலகத்திற்கு வந்து என்னிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ளலாம். நான் தெளிவாகச் சொல்கிறேன். நான் எந்தத் தவறும் செய்யவில்லை, நான் ஒருபோதும் BCCI-யிடம் மன்னிப்பு கேட்கவில்லை, ஒருபோதும் மன்னிப்பு கேட்கவும் மாட்டேன்” என்று மொசின் நக்வி தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
