உலக பாரா தடகளம்: ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற இந்திய வீரர் ரிங்கு ஹூடா
புதுடெல்லி, டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 12-வது உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. இதில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் (எப்.46 பிரிவு) போட்டியில், இந்திய வீரர் ரிங்கு ஹூடா (வயது 26) கலந்து கொண்டார். அவர், 66.37 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து தங்க பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கப்பதக்கம் இதுவாகும். மற்றொரு இந்திய வீரர் சுந்தர் சிங் குர்ஜார் வெள்ளிப்பதக்கமும் (64.76 மீட்டர்), கியூபா வீரர் குல்லெர்மோ வரோனா கொன்சாலெஸ் (63.34 மீட்டர்) வெண்கலப்பதக்கமும் வென்றனர். 3 வயதில் விபத்து ஒன்றில் இடது பக்க கையில் பாதிப்பு ஏற்பட்டபோதும், மனவுறுதியுடன் தொடர்ந்து பயிற்சி பெற்று சாதனையாளராக உருவாகி உள்ளார். சிறு வயதில் பள்ளி அளவில் ஓட்ட பந்தய போட்டிகளில் பங்கேற்று வந்த ரிங்கு, கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி முதல் ஈட்டி எறிதல் பயிற்சியை பெற தாடங்கினார். 2016-ம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று 54.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்து 5-வது இடம் பெற்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
