தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத உயர்வு...இன்றைய நிலவரம் என்ன?
சென்னை,தங்கம் விலை கடந்த 23-ந்தேதி ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்தை தாண்டி, இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. அதனைத் தொடர்ந்து 2 நாட்கள் விலை குறைந்து சற்று ஆறுதலை கொடுத்தது. ஆனால் கடந்த 26-ம் தேதி மீண்டும் விலை அதிகரித்தது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினமும் தங்கம் விலை மேலும் அதிகரித்தது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.750-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 640-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், தங்கம் விலை இன்று (29-09-2025) வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் விலை கிராமுக்கு ரூ.60-ம், சவரனுக்கு ரூ.480-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 700-க்கும், ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. ஒரே நாளில் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.160-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 29.09.2025 ஒரு சவரன் ரூ.85,600 (இன்று) 27.09.2025 ஒரு சவரன் ரூ.85,120 26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080 24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
சத்தீஷ்காரில் மேலும் 29 நக்சலைட்டுகள் சரண்
கூடலூரில் வீடு புகுந்து மூதாட்டியிடம் நகை பறிப்பு
பெங்களூரு: மெட்ரோ பணியின்போது திடீரென கவிழ்ந்த ராட்சத கிரேன்
கிணற்றில் தவறி விழுந்த குட்டி யானையை போராடி மீட்ட வனத்துறையினர்
தேசிய இளையோர் திருவிழா நிறைவு நாள் நிகழ்ச்சி: தமிழக மாணவியுடன் உரையாடிய பிரதமர் மோடி
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற சமத்துவ கோட்பாட்டோடு பயணிப்போம் - ஆதவ் அர்ஜுனா
ஜல்லிக்கட்டு மீண்டும் எழுச்சி பெற்றுள்ளது - நடிகர் சூரி
திருச்சி: பெரிய சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது
அனைவருக்கும் நலமும், வளமும் பெருக வேண்டுகிறேன் - அண்ணாமலை வாழ்த்து
சென்னையில் இன்று இறைச்சிக் கடைகள் செயல்பட தடை
