பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தது இலங்கை: ஐ.நாவில் அநுர குமாரதிசாநாயக்க அறிவிப்பு - லங்காசிறி நியூஸ்
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இலங்கை அறிவித்துள்ளது. பாலஸ்தீனம் என்ற தனி அரசுக்கான உரிமையை அங்கீகரிப்பதாக இலங்கை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க அறிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 80 வது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய இலங்கை ஜனாதிபதி அநுர குமாரதிசாநாயக்க இந்த முடிவை அறிவித்துள்ளார். அதில், இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான தேவைகளை அங்கீகரிப்பது அவசியம் என்றும் அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும் 1967 ஆம் ஆண்டு எல்லை வரையறையை அடிப்படையாக கொண்டு ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்காக நாம் ஒன்றுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.தொடர்ந்து பேசிய அநுர, உலகம் முழுவதும் நடைபெறும் அர்த்தமற்ற போரில் மில்லியன் கணக்கான மக்கள் பாதிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய முக்கியமான நேரத்தை அடைந்துவிட்டோம்.நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து போரையும் நிராகரிக்க என்னுடன் சேருவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் எனவும் அநுர குமாரதிசாநாயக்க பேசியுள்ளார். அத்துடன் உலகில் உள்ள எந்தவொரு நாடும் போரை விரும்பவில்லை, போர் எங்கு நடந்தாலும் அது ஒரு சோகம், இப்போது கூட அந்த சோகத்தின் வலி உலகம் முழுவதும் உணரப்படுகிறது என்று அநுர குமாரதிசாநாயக்க தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
