ஜிஎஸ்டி வரி குறைப்பு: ஏ.சி., டி.வி.க்களின் விற்பனை அதிகரிப்பு

கடந்த 2017-ம் ஆண்டு முதல் இருந்து வந்த 4 அடுக்கு ஜி.எஸ்.டி. விகிதத்தை குறைக்க மத்திய அரசு முடிவு செய்தது.இந்தநிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையின்போது ஜி.எஸ்.டி.யில் சீர்திருத்தம் செய்யப்படும் என்று அறிவித்தார். இது மக்களுக்கு தீபாவளி பரிசாக அமையும் என்றார். அதன்படி ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் 5, 12, 18 மற்றும் 28 சதவீதங்கள் என்ற 4 அடுக்கில் இருந்த வரிகளை நீக்கிவிட்டு 5 மற்றும் 18 சதவீதங்கள் என்ற 2 அடுக்கு முறையை கொண்டு வந்தது. அதே நேரம் ஆடம்பரப் பொருட்களுக்கு இழப்பீட்டு செஸ் விதிக்கப்பட்டது. இந்த சீர்திருத்தம் 22-9-2025 முதல் அமலாகும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. மத்திய அரசு அறிவித்தபடி ஜி.எஸ்.டி. குறைப்பு நேற்று முதல் அமலுக்கு வந்தது. வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் மின் சாதன பொருட்களின் விலையும் ஜிஎஸ்டி வரியில் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், ஏசி, டிவிக்களின் விற்பனை அதிகரித்துள்ளதாக விற்பனை நிறுவனங்கள் கூறியுள்ளன. பண்டிகை காலம் நெருங்கி வருவதால், விலை மற்றும் ஜிஎஸ்டி குறித்த நிலவும் சந்தேகங்கள் தீர்ந்த பிறகு விலை மேலும் அதிகமாகும் என்று வணிகள் தெரிவித்துள்ளனர்.
மூலக்கதை
