ஏஐ தொழில்நுட்பத்தால் பெண்களின் வேலையில் அதிக பாதிப்பு ஏற்படும்: ஐ.நா. ஆய்வில் தகவல்
உலக அளவில் தற்போது ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்கள் கூட அதைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அனைவருடமுமே ஸ்மார்ட்போன் இருப்பதால் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு மெல்ல மெல்ல மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஏஐ-யால் எந்த அளவு நன்மை இருக்கிறதோ அதே அளவுக்கு தீமையும் உள்ளது. அதாவது, ஏஐ காரணமாக பெரிய அளவிலான வேலை இழப்பு ஏற்படும் அச்சமும் உள்ளது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருகின்றன. இதற்கு செயற்கை நுண்ணறிவு காரணம் இல்லை என்று நிறுவனங்கள் கூறினாலும் மறைமுகமாக செயற்கை நுண்ணறிவே இதற்கு முதன்மையான காரணமாக இருக்கிறது. இந்த நிலையில், ஐநா நடத்திய ஆய்வில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் தாக்கம் காரணமாக உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21% பேரின் வேலைவாய்ப்பு பாதிக்கப்படும் எனத் தெரியவந்துள்ளது. பெண்களில் 28% பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு ஏற்படக்கூடும் என்றும் இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் எனப்படுகிறது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
