டெல்லியில் 26-ந்தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம்

புதுடெல்லி, தமிழ்நாடு, கர்நாடகம் இடையேயான காவிரி நதிநீர் பங்கீட்டு பிரச்னையை கண்காணிப்பதற்காக காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி முறைப்படுத்தும் குழுவை அமைத்து சுப்ரீம் கோர்ட்டு கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. இந்த இரண்டு அமைப்புகளும் அவ்வப்போது கூடி பல்வேறு முடிவுகளை எடுத்து வருகின்றன. காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை 43 முறை கூடியுள்ளது. இந்நிலையில், காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 44-வது கூட்டம், வரும் 26-ந்தேதி வெள்ளிக்கிழமை) பிற்பகல் 2.30 மணிக்கு அதன் தலைவர் எஸ்.கே ஹல்தார் தலைமையில் டெல்லி பிகாஜி காமா பிளேசில் உள்ள எம்.டி.என்.எல் கட்டிடத்தில் நடைபெற உள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் செயலர் டி.டி.சர்மா தகவல் அனுப்பியுள்ளார்.
மூலக்கதை
