பிரதமரான பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்: மோடி பேச்சு

  தினத்தந்தி
பிரதமரான பிறகு 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன்: மோடி பேச்சு

இடா நகர், அருணாசல பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடி இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு ரூ. 5,100 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது: சூரிய கதிர்கள் முதலில் அருணாசல பிரதேசத்திற்கு வந்தாலும் வளர்ச்சியின் கதிர்கள் வர தசாப்தங்கள் ஆனது. காங்கிரஸ் கட்சியின் சிந்தனை முழு வடகிழக்கு பகுதிக்கும் தீங்கு விளைவித்தது. அதனால், வளர்ச்சி பின் தங்கியது. பிரதமரான பின் 70 முறை வடகிழக்கு மாநிலங்களுக்கு சென்றுள்ளேன். அருணாசல பிரதேசம் சூரியன் உதிக்கும் பூமி மட்டுமல்ல. தேச பக்தி எழுச்சியின் பூமியும் கூட; மூவர்ணக்கொடியின் முதல் நிறம் காவியில் இருப்பது போல் அருணாசல பிரதேசத்தின் முதல் நிறமும் காவிதான். அருணாசல பிரதேசத்தின் மக்கள் துணிச்சல் மற்றும் அமைதியின் சின்னம்” என்றார்.

மூலக்கதை