லிவ்-இன் முறையில் குடித்தனம்:காதலி வேறொருவருடன் பழக்கம்...உதவிக்கு நண்பரை அழைத்த வாலிபர்

  தினத்தந்தி
லிவ்இன் முறையில் குடித்தனம்:காதலி வேறொருவருடன் பழக்கம்...உதவிக்கு நண்பரை அழைத்த வாலிபர்

கான்பூர், உத்தர பிரதேச மாநிலம் கான்பூரை சேர்ந்தவர் சூரஜ் குமார் உத்தம் (வயது 22) இவருக்கு சமூக வலைதளமான இன்ஸ்டாமூலம் கான்பூரின் பார்ரா பகுதியை சேர்ந்த அகான்ஷா (வயது 20) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இந்த பழக்கம் காதலாகி மாறியது.அகன்ஷா ஒரு உணவகத்தில் வேலை பார்த்து வந்தார். சூரஜ் அங்கு சென்று அகான்ஷாவுடன் பேசி பழகி காதலை வளர்த்து வந்தார். பின்னர் அகன்ஷா லிவ்-இன் முறையில் சூரஜ் குமார் உத்தமுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். இருவரும் வீட்டில் இருக்கும்போது தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.இந்தநிலையில் அகான்ஷா திடீரென வேறுஒருநபருடன் மணிக்கணக்கில் பேசி வந்துள்ளார். சூரஜ்ஜாவுக்கு இது சந்தேகத்தை ஏற்படுத்தியது. அகன்ஷா வேறொரு ஆணுடன் பேசியதை அறிந்த சூரஜ்குமார் ஆத்திரமடைந்தார். அவருடன் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கூறினார். இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வந்த அகன்ஷா அந்த ஆணுடன் தொடர்ந்து பேசிவந்ததாக கூறப்படுகிறது. அவர் இது குறித்து அகான்ஷாவிடம் கேட்டபோது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆவேசமடைந்த சூரஜ்குமார் உத்தம் காதலி என்றும் பாராமல் அகான்ஷாவின் தலையை பிடித்து இழுத்து சுவற்றில் அடித்தார். மேலும் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். அதன்பிறகு கொலையை மறைக்க சூரஜ்குமார் உத்தம் தனது நண்பரான ஆஷிஷ் குமார் உதவியை நாடினார். அவரது உதவியுடன் அகான்ஷாவின் உடலை ஒரு பையில் அடைத்து அங்கிருந்து சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பண்டா பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார். அகன்ஷா உடல் அடைக்கப்பட்டிருந்த பையை யமுனை ஆற்றில் வீச திட்டமிட்ட சூரஜ்குமார் உத்தம், அதற்கு முன்பு அகான்ஷா உடல் அடைக்கப்பட்ட பையுடன் தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுத்துள்ளார். இதற்இடையே தனது மகளை காணவில்லை என அகான்ஷாவின் தாயார் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில் சூரஜ்குமார் உத்தம் தான் தனது மகளை கடத்தியதாக குற்றம் சாட்டி இருந்தார்.புகாரின்பேரில் சூரஜ் குமாரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசி உள்ளார். போலீசார் தங்களது பாணியில் விசாரணை நடத்தியபோது அகான்ஷாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.அவரது செல்போனில் அகான்ஷாவீன் உடல் அடைக்கப்பட்டிருந்த பை முன்பு நின்று சூரஜ்குமார் உத்தம் எடுத்த செல்பி புகைப்படம் இருந்தது செல்போனை பறிமுதல் செய்த போலீசார் கொலையை மறைக்க உடந்தையாகை ருந்த ஆஷீஷ் குமாரையும் கைது செய்தனர்.

மூலக்கதை