சசிகலா அணியில் இருந்து விலகுவதாக வெண்மதி அறிவிப்பு

  தினத்தந்தி
சசிகலா அணியில் இருந்து விலகுவதாக வெண்மதி அறிவிப்பு

சென்னை, சசிகலாவின் தீவிர ஆதரவாளராக கருதப்படும் வெண்மதி எப்போதும் அவர் நிழல் போல கூடவே பயணிப்பவர். கடந்த காலங்களில் சசிகலா சுற்றுப் பயணம் செய்தபோது, அவரது செய்தியாளர் சந்திப்புகளின் போதும் கூடவே இருப்பவர். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சசிகலா பேட்டி அளித்த போது அவருக்கு அருகில் நின்று கொண்டிருந்த வெண்மதி கொடுத்த முக பாவனைகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகியது. இதனை வைத்தே ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் நெட்டிசன்கள் மூலம் பறக்க விடப்பட்ட நிலையில் அவர் யார் என தேடத் தொடங்கும் அளவுக்கு பேமஸ் ஆனார். இந்த நிலையில் அப்போது சசிகலாவின் பேட்டியை விட அவரது முகபாவனைகள் தான் பேசப்பட்டது. இந்தநிலையில், தனியார் டிவி நிகழ்ச்சி ஒன்றிற்கு பேட்டி அளித்த சசிகலாவின் தீவிர ஆதரவாளரான வெண்மதி, அதிமுகவை ஒன்றிணைக்க சசிகலா முன்னெடுப்புகளை மேற்கொள்ளாததால் அவரிடம் இருந்து விலகுவதாகவும், சசிகலா இன்னமும் காலம் தாழ்த்திக் கொண்டே செல்வதால், என்னாலும் என்னுடன் இருப்பவர்களிடம் பதில் சொல்ல முடியவில்லை என்று கூறியுள்ளார். அதிமுகவை பாஜகதான் திட்டமிட்டு பிரித்ததாகவும் அவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இதனிடையே வெண்மதி அதிமுகவில் இணைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.

மூலக்கதை