கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக 2 கிராம மக்கள் புகார்

ஊட்டி,நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கோடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா மற்றும் எஸ்டேட் உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு கொலை, கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். தற்போது அவர்கள் ஜாமீனில் வெளியில் உள்ளனர். இது தொடர்பான வழக்கு ஊட்டி கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் நிர்வாகத்தினர் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பதாக 2 கிராம மக்கள் ஊட்டி மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் எஸ்டேட் வளாகத்தில் உள்ள 2 கிராம மக்கள் சாலைகளை பயன்படுத்த, உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எஸ்டேட் நிர்வாகம் முறையாக பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மூலக்கதை
