சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள இ-சிகரெட்டுகள் பறிமுதல்

  தினத்தந்தி
சென்னை விமான நிலையத்தில் ரூ. 1.33 கோடி மதிப்புள்ள இசிகரெட்டுகள் பறிமுதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சென்னைக்கு இன்று சரக்கு விமானம் வந்தது. இந்த விமானத்தில் கொண்டு வரப்பட்ட பொருட்களை சுங்கத்துறை அதிகாரிகள் வழக்கம்போல் சோதனை செய்தனர். அப்போது, சரக்கு விமானத்தில் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டிருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தன. இதையடுத்து, இ-சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மொத்தம் 4 லட்சத்து 31 ஆயிரம் வெளிநாட்டு இ-சிகரெட்டுகள் கடத்தி வரப்பட்டுள்ளதாகவும், இந்த இ-சிகரெட்டுகளின் மதிப்பு 1 கோடியே 33 லட்ச ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இ-சிகரெட்டுகளை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை