நாகூர் ஆண்டவர் தமிழகத்துக்கு நல்ல மாற்றத்தை கொடுப்பார் - அன்புமணி பேட்டி

  தினத்தந்தி
நாகூர் ஆண்டவர் தமிழகத்துக்கு நல்ல மாற்றத்தை கொடுப்பார்  அன்புமணி பேட்டி

நாகப்பட்டினம்,உரிமை மீட்க தலைமுறை காக்க என்ற 100 நாள் நடைபயணத்தை பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வருகிறார். அதன்படி கும்பகோணத்தில் இருந்து நாகப்பட்டினத்துக்கு வந்தார். அப்போது நாகூரில் உள்ள உலகபுகழ்பெற்ற நாகூர் ஆண்டவர் தர்காவிற்கு அன்புமணி ராமதாஸ் வந்தார். அவருக்கு தர்கா நிர்வாகம் சார்பாக தொப்பி அணிவித்து பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது.தொடர்ந்து நாகூர் ஆண்டவர் சமாதியில் வழிபாடு நடத்தினார். அதன்பின்னா் தர்காவை விட்டு வெளியே வந்த அன்புமணி ராமதாசிடம், தி.மு.க.- த.வெ.க. இடையே தான் 2026-ல் போட்டி என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் அதற்கு பதில் அளிக்காமல் சென்றார். பின்னர் சிறிது தூரம் நடந்து சென்று நாகூர் ஆண்டவர் தமிழ்நாட்டிற்கு நல்ல மாற்றத்தை கொண்டு வருவார் என ஒருவரியில் பதிலளித்து விட்டு நாகூரில் இருந்து புறப்பட்டார்.

மூலக்கதை