ஜி.எஸ்.டி. குறைப்புக்கு மத்திய அரசு சொந்தம் கொண்டாடுவதா? மம்தா பானர்ஜி கேள்வி

கொல்கத்தா, ஜி.எஸ்.டி. வரிவிகித குறைப்பு இன்று அமலுக்கு வருவதையொட்டி, பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அதைத்தொடர்ந்து, மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- ஜி.எஸ்.டி. குறைப்பால் மேற்கு வங்காளத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இருப்பினும், வரிகுறைப்பு எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், வரிகுறைப்புக்கு நீங்கள் (பிரதமர் மோடி) ஏன் சொந்தம் கொண்டாடுகிறீர்கள்? வரிவிகிதங்களை குறைக்குமாறு நாங்கள்தான் கோரிக்கை விடுத்தோம். ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் யோசனை தெரிவித்தோம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மூலக்கதை
