இலங்கையில் ஹெரோயின் விற்பனையாளர் கைது: யாழ்ப்பாணம் பொலிஸார் அதிரடி - லங்காசிறி நியூஸ்

இலங்கையில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருநகர் பகுதியில் குற்ற தடுப்பு பிரிவினரால் ஹெரோயின் விற்பனையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து பொலிஸார் 120 மில்லி கிராம் எடையுள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் யாழ்ப்பாணம் குருநகரை சேர்ந்த 36 வயது நபர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலக்கதை
