விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் நாளை மின்தடை

  தினத்தந்தி
விஜய் பிரசாரம் செய்யும் திருவாரூரில் நாளை மின்தடை

திருவாரூர், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் கடந்த 13-ந் தேதி சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார். அந்த வகையில், நாளை (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். நாகையில் மதியம் 11.00 மணிக்கு தொண்டர்கள் மத்தியில் பேசும் விஜய், அதனைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு திருவாரூரில் பேச இருக்கிறார். விஜய் பேசுவதற்கு 26 நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர். ஆனால், விஜய் பேசும் பகுதியில் நாளை பராமரிப்பு பணி காரணமாக மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரம் செய்யும் இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் இடையூறு செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. அதேப்போல், விஜய் பிரசாரம் செய்யும் இடங்களிலும் மின் தடை செய்து இடையூறு ஏற்படுத்த முயற்சி செய்வதாக அக்கட்சியினர் புகார் தெரிவித்துள்ளனர். இருந்தாலும், விஜய் பேசும்போது ஜெனரேட்டர் மூலம் தடையில்லா மின்சாரம் வழங்க அக்கட்சி நிர்வாகிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மூலக்கதை