நிர்வாண விருந்து நிகழ்ச்சி: ரூ.1 லட்சம் கொடுத்து பங்கேற்க இருந்த தம்பதிகள் - திடுக்கிடும் தகவல்

  தினத்தந்தி
நிர்வாண விருந்து நிகழ்ச்சி: ரூ.1 லட்சம் கொடுத்து பங்கேற்க இருந்த தம்பதிகள்  திடுக்கிடும் தகவல்

ராய்பூர், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள கிளப் மற்றும் எஸ்.எஸ். பார்ம், ஸ்டேஞ்சர் ஹவுஸ் பூல் பார்ட்டி ஏற்பாட்டா ளர்கள் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் நடப்பது போல் நிர்வாண விருந்தை நடத்த ஏற்பாடு செய்திருந்தனர். வருகிற 21-ந்தேதி தனியார் பண்ணை வீட்டில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு 'வரையறுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டிருந்தது. மேலும் நிகழ்ச்சி நடக்கும் இடங்களை கூட மிகவும் ரகசியமாகவே வை த்தி ரு ந் த னர். செல்போன்களுக்கும் தடை விதித்திருந்தனர்.இந்த நிர்வாண விருந்து நிகழ்ச்சிக்கு ஒருவருக்கு தலா ரூ.40 ஆயிரம் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு காதல் ஜோடிகள், தம்பதியினர் ரூ.1 லட்சம் கூட கொடுக்க தயாராக முன்வந்துள்ளனர். மும்பை மற்றும் பெங்களுருவை சேர்ந்த திரைப்பிரபலங்கள் கூட இதில் பங்கேற்க ஆர்வத்துடன் இருந்துள்ளனர். இது இளைஞர்களுக்கான ஒரு உயர்மட்ட கூட்டம் என்றும் இதில் நிர்வாணமாக கலந்து கொள்ளலாம் என்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்திருந்தனர். சமூக வலைதளங்களில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் போஸ்டர் வெளியிட்டிருந்தனர். இது சட்டீஸ்கர் மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து போலீசார் 7 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை