இலங்கையில் கல்வீசி தாக்கிய மகள் மற்றும் பேரக்குழந்தைகள்: பரிதாபமாக உயிரிழந்த தாய் - லங்காசிறி நியூஸ்
இலங்கையின் குருநாகலில் இரண்டு பிள்ளைகளுக்கு இடையிலான சண்டையை தடுக்க முயன்ற தாய் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். ஒருவருக்கு ஒருவர் கல்வீசி தாக்கி கொண்ட போது பிள்ளைகள் வீசிய கல்லில் தாக்கப்பட்டு தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தை தொடர்ந்து உயிரிழந்த தாயின் மகள் மற்றும் பேரன் ஆகியோரை கோகரெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். உயிரிழந்த 80 வயது மதிக்கத்தக்க மூதாட்டி இப்பாகமுவ பகுதியில் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.உயிரிழந்த தாயின் மகளும், மகனும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே கடந்த சில காலமாக கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. அவ்வப்போது இருக்கும் இடையே மோதல்கள் வெடித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இருவருக்கும் இடையிலான வாக்குவாதம் சண்டையாக மாறி ஒருவரை ஒருவர் கற்களால் வீசி தாக்கிக் கொண்டுள்ளனர். பெரியவர்களுக்கு இடையிலான இந்த கல்வீச்சு சண்டையில் உயிரிழந்த மூதாட்டியின் பேரப்பிள்ளைகளும் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சண்டையை தடுக்க முயற்சி செய்த மூதாட்டி முகத்தில் மீது கல் தாக்கியதில் முதலில் மயக்கமடைந்துள்ளார். பின்னர் சிகிச்சைக்காக குருநாகல் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூதாட்டி சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
