கெஹல்பத்தர பத்மே வழக்கில் இராணுவ அதிகாரி கைது: விசாரணையில் திடீர் திருப்பம் - லங்காசிறி நியூஸ்

கெஹல்பத்தர பத்மே விசாரணையில் திடீர் திருப்பமாக இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இலங்கையில் பல குற்ற வழக்குகளுடன் தொடர்புடைய நிழல் உலகக் குழுவின் தலைவர் என அழைக்கப்படும் கெஹல்பத்தர பத்மே இந்தோனேசியாவில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். கெஹல்பத்தர பத்மே தற்போது தடுப்பு காவலில் வைக்கப்பட்டு இருப்பதோடு, அவர் உட்பட மேலும் 5 நிழல் உலக முக்கிய புள்ளிகளுடன் பொலிஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகியோருடன் தொடர்புடைய இராணுவ அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் சம்பந்தப்பட்ட ராணுவ அதிகாரி இன்று (11.09.2025) கைது செய்யப்பட்டுள்ளார். கெஹல்பத்தர பத்மே மற்றும் கொமாண்டோ சலிந்த ஆகிய இருவருக்கும் துப்பாக்கிகளை வழங்கிய குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூலக்கதை
