யாழில் அரங்கேறிய வாள்வெட்டு சம்பவம்: 10 நாட்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது - லங்காசிறி நியூஸ்
சமீபத்தில் யாழில் நடைபெற்ற வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் 10 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். யாழ் வேலணை பகுதியில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபர் 10 நாட்களுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். ஊர்காவற்றுறை பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கையானது நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. வேலணை அராலி சந்தியில் கடந்த மாதம் 31ம் திகதி பட்டா ரக வாகனத்தில் வந்த சிலர் காரில் சென்ற நபர் ஒருவரை வழிமறித்து வாளால் வெட்டி படு காயத்திற்கு உள்ளாக்கி விட்டு தப்பிச் சென்றது.இதையடுத்து காயமடைந்த நபர் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் இந்த வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய தாக்குதல் குழுவினரை பிடிக்க பொலிஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.இந்நிலையில், ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி கொன்சாபத்து ஹரிதாஸ் தலைமையில் அமைக்கப்பட்ட குழு பிரதான குற்றவாளியை அதிரடியாக கைது செய்துள்ளனர். அத்துடன் மீதமுள்ள நபர்களை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
