இலங்கையில் பிடிபட்ட ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்: அரசை விமர்சித்தவர்களுக்கு ஆபத்து! - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் சமீபத்தில் கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கம் மீது விமர்சனம் வைத்த நபர்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஐஸ் போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் கடந்த வாரம் மிததெனியவில் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கொள்கலன்கள் பரிசோதனைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமல், துறைமுகத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 323 கொள்கலன்களுடன் உள்ளடங்கி இருந்ததாக சமூக வலைத்தளத்தில் பலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மேலும் இதனை பொலிஸ் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் தங்கள் பதிவுகளில் மேல் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில் ஐஸ் போதைப்பொருள் கொள்கலன்கள் தொடர்பில் அரசாங்கத்தின் மீது விமர்சனம் முன்வைத்தவர்களுக்கு எதிராக அரசு சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான பணிப்புரையை பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய வழங்கியுள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
