15 பேர் உயிரை காவு வாங்கிய அதே பகுதி! இலங்கையில் மற்றொரு சாலை விபத்து - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் வெல்லவாய-தனமல்வில பிரதான சாலையில் லொறியும் மற்றொரு மோட்டார் வாகனமும் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த பயங்கர விபத்து யாலபோவ டிப்போவுக்கு எதிரில் இன்று காலை ஏற்பட்டுள்ளது. விபத்தை தொடர்ந்து மோட்டார் வாகனத்தில் பயணித்த இருவர் படுகாயங்களுடன் வெல்லவாய ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்த விபத்து சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய பகுதியில் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்த சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.பேருந்தில் மொத்தம் 34 பேர் பயணித்த நிலையில், 15 பேர் உயிரிழந்து இருப்பதுடன், 18 பேர் காயமடைந்துள்ளனர்.அத்துடன் பயணி ஒருவர் காணாமல் போயிருப்பதாகவும் பொலிஸார் தகவல் தெரிவித்துள்ளனர். தங்காலை நகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் சென்ற தனியார் சுற்றுலா பேருந்து, நுவரெலியாவிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த போது, ஒரு சொகுசு காரில் மோதி பள்ளத்தில் விழுந்தமை குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
