இலங்கையில் தமிழர் பகுதி கோவில் ஒன்றில் 220,000 ரூபாய் ஏலம் போன மாம்பழம்! - லங்காசிறி நியூஸ்

இலங்கையில் தமிழர் பகுதியில் அமைந்துள்ள கோவிலில் மாம்பழம் ஒன்று சுமார் 2 லட்சத்திற்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.இலங்கையின் வவுனியா - உக்குளாங்குளம் ஶ்ரீ சக்தி விநாயகர் கோயிலில் வருடாந்த மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெற்றது.இந்த திருவிழாவில் கவனிக்கத்தக்க நிகழ்வாக மாம்பழம் ஒன்று கிட்டத்தட்ட 220,000 ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது. உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் மகோற்சவ உற்சவத்தின் 6ம் நாள் மாம்பழ திருவிழா நேற்று நடைபெற்றது. கோயிலின் வளர்ச்சி நிதிக்காக விநாயகருக்கு படைக்கப்பட்ட மாம்பழம் ஒன்று ஏலத்தில் விடப்பட்டது. இறுதியில் உக்குளாங்குளம் பகுதியில் வசிக்கும் சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவர் 220,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கினார். இந்த சிந்துஜா உபாரிஸ் ஜெகதீஸ்வரன் என்பவரே கடந்த ஆண்டும் 285,000 ரூபாய்க்கு மாம்பழத்தை ஏலத்தில் வாங்கியது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை
