சீனாவின் ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற சர்வதேச நாடுகளின் தலைவர்கள்
பீஜிங், இரண்டாம் உலகப் போர் முடிந்து 80 ஆண்டுகள் நிறைவடைந்ததை குறிக்கும் வகையில், சீனாவின் தலைநகர் பீஜிங்கில் இன்று பிரம்மாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது. இந்த ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சியில், சீனாவின் நட்பு நாடுகள் உள்பட சுமார் 26 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நீண்ட காலத்திற்கு பிறகு வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ள ரஷிய அதிபர் புதின் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஆகியோர் தியான்மென் சதுக்கத்திற்கு வருகை தந்து சீன ராணுவத்தின் அணிவகுப்பை பார்வையிட்டனர். அவர்கள் ஒற்றுமையாக பொதுவெளியில் தோன்றியதன் மூலம், அமெரிக்காவுக்கு எதிரான தங்கள் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளனர் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதே போல் ஈரான் அதிபர் மசூத் பெசேஸ்கியன், பெலாரஷியாவின் அதிபர் அலெக்ஸாண்டர் லுகாசென்கோ, கம்போடியா மன்னர் நரோதம் சிகாமணி, வியட்நாம் அதிபர் லுவாங் குவாங், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராகிம், மியான்மர் ராணுவ தலைவர் ஆங் ஹிலாங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப், கசகஸ்தான் அதிபர் காசிம் ஜோமார்ட், கியூபா அதிபர் மிகுவெல் டயாஸ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை செர்பியா அதிபர் மற்றும் ஸ்லொவாக்கியா பிரதமரை தவிர மற்ற தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அமெரிக்கா, ஜப்பான் மற்றும் இந்தியாவின் தலைவர்களும் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
