அமெரிக்காவுக்கு எதிராக சதி: சீனா மீது டிரம்ப் பாய்ச்சல்
வாஷிங்டன்,சீனாவின் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் புதின், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் கலந்து கொண்டதை அமெரிக்க அதிபர் டிரம்ப் விமர்சித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் கூறியதாவது: சீனாவுக்கு வெளிநாட்டு படையெடுப்பாளர்களிடமிருந்து சுதந்திரம் கிடைக்க, அமெரிக்கா அளித்த மகத்தான ஆதரவையும் சிந்திய ரத்தத்தையும் சீன அதிபர் ஜின்பிங் குறிப்பிடுவாரா இல்லையா என்பதுதான் பதிலளிக்கப்பட வேண்டிய பெரிய கேள்வி. சீனாவின் வெற்றி மற்றும் பெருமைக்கான தேடலில் பல அமெரிக்கர்கள் தங்கள் இன்னுயிரை நீத்தனர். அவர்களின் துணிச்சல் மற்றும் தியாகத்திற்காக அவர்கள் சரியாக மதிக்கப்படுவார்கள் மற்றும் நினைவுகூரப்படுவார்கள் என்று நம்புகிறேன். அதிபர் ஜின்பிங்கிற்கும், சீனாவின் அற்புதமான மக்களுக்கும் ஒரு சிறந்த, நீடித்த கொண்டாட்ட நாள் அமையட்டும்.“அமெரிக்காவுக்கு எதிராக நீங்கள் சதி செய்யும்போது புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்தார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
