எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு: காதலனுக்கு குறுந்தகவல் அனுப்பிவிட்டு மாணவி தற்கொலை
திருவனந்தபுரம்கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், மொடக்கல்லூர் அத்தோலி பகுதியைச் சேர்ந்தவர் ஆயிஷா ரஷா (வயது 21). இவர் மங்களூரில் உள்ள தனியார் பிசியோதெரபி கல்லூரியில் 3ம் ஆண்டு மாணவி ஆவார். இவருக்கு வெங்கேரி பன்னடிகல் பகுதியை சேர்ந்த பஷீர்தீன் முகம்மது என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமாகியுள்ளார். உடற்பயிற்சி மாஸ்டரான அவரும், மாணவியும் காதலித்து வந்துள்ளனர். பஷீர்தீன் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் பணியாற்றி வந்ததால் கோழிக்கோடு எரஞ்சிபாலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்தார். அந்த வீட்டுக்கு மாணவி ஆயிஷா ரஷா அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். கடந்த சில நாட்களுக்கு முன்பும் மாணவி, காதலனின் வீட்டுக்கு சென்றிருக்கிறார். இந்த நிலையில் தான் வேலை பார்த்து வரும் உடற்பயிற்சி கூடத்தில் நடந்த ஓணம் பண்டிகை கொண்டாட்டத்திற்கு பஷீர்தீன் சென்றார். ஆனால் அந்த நிகழ்ச்சிக்கு செல்லக்கூடாது என மாணவி ஆயிஷா கூறியிருக்கிறார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு நடந்தது. இருந்தபோதிலும் காதலியின் பேச்சை கேட்காமல் ஓணம் கொண்டாட்டத்திற்கு பஷீர்தீன் சென்றுவிட்டார். இந்த நிலையில் காதலனின் வீட்டில் மாணவி ஆயிஷா ரஷா தூக்குப்போட்டு தொங்கினார். உயிருக்கு போராடிய நிலையில் இருந்த அவர் அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் மாணவி ஆயிஷா ரஷா பரிதாபமாப இறந்து விட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை மிரட்டி அடித்ததாக அவரது உறவினர்கள், காதலன் மீது குற்றம் சாட்டினர். இதனால் மாணவியின் செல்போனை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது மாணவி தற்கொலை செய்வதற்கு முன்பு தனது காதலனுக்கு வாட்ஸ்அப்பில் குறுந்தகவல் அனுப்பியிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். அதில், "எனது மரணத்துக்கு நீயே பொறுப்பு" என்று கூறியிருந்தார். இதையடுத்து மாணவியின் காதலன் பஷீர்தீனை போலீசார் கைது செய்தனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
