ஆப்கானிஸ்தானுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தது இந்தியா
புதுடெல்லி, ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணம் குனார். பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்த மாகாணத்தில் தொடர்ந்து பல நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அவற்றில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளிகளாக பதிவானது. இது நங்கர்ஹார் மாகாணம் நுலாலாபாத்தை மையமாக கொண்டு உருவானது. அண்டை நாடுகளான பாகிஸ்தான், இந்தியாவிலும் இதன் தாக்கம் உணரப்பட்டது. இதற்கிடையே மலை பிரதேசமான குனார் மாகாணத்தின் பல கிராமங்களில் உள்ள வீடுகள் மண்ணால் கட்டப்பட்டு இருந்தன. நிலநடுக்கம் ஏற்பட்டபோது 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின.நள்ளிரவு நேரம் என்பதால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் உயிருடன் புதையுண்டனர். இதனையடுத்து அவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதுவரை கிடைத்த தகவலின்படி நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 1400-ஐ தாண்டியது.3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்தநிலையில், ஆப்கானிஸ்தானில் தற்போதுள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்நாட்டுக்கு உதவுவதாக இந்தியா அறிவித்தது. அதன்படி அந்நாட்டுக்கு 21 டன் எடையில் நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது.இது குறித்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் எக்ஸ் பதிவில் கூறியதாவது:-நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கு நிவாரண உதவிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. காபூலுக்கு வான் வழியாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு இருக்கின்றன. மருந்து பொருட்கள், போர்வைகள், சக்கர நாற்காலிகள்,சானிடைசர்கள்,ஜெனரேட்டர்கள், சமையலறை பாத்திரங்கள், என விமானம் மூலம் 21 டன் நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள நிலைமையை இந்தியா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நாட்களில் மேலும் நிவாரண பொருட்கள் அங்கு அனுப்பி வைக்கப்படும் என அதில் பதிவிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சாத்தியமான அனைத்து மனிதாபிமான உதவிகளையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
