திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
திருப்பதி மாவட்டம் திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் வருகிற 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி நடந்தது. கோவில் வளாகம் மற்றும் பூஜை பொருட்கள் அனைத்தையும் சுத்தம் செய்யப்பட்டது. மேலும் வாசனைப்பொருட்கள் கலந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. இதையொட்டி பக்தர்கள் கோவிலுக்கு அனுமதிக்கப்படவில்லை. ஆழ்வார் திருமஞ்சனம் முடிந்தவுடன் காலை 9 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பவித்ரோற்சவத்தை முன்னிட்டு நாளை (வியாழக்கிழமை) அங்குரார்ப்பணம் நடைபெற உள்ளது. அதனைத்தொடர்ந்து 5-ந் தேதி பவித்ர பிரதிஷ்டை, 6-ந் தேதி பவித்ர சமர்ப்பணம், 7-ந் தேதி பூர்ணாஹூதி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகளை முன்னிட்டு, நாளை முதல் வருகிற 7-ந் தேதி வரை கோவிலில் நடைபெறும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, பிரேக் தரிசனம் உள்ளிட்ட சில ஆர்ஜித சேவைகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
