‘நக்சல்களை முழுமையாக ஒழிக்கும்வரை பா.ஜ.க. அரசு ஓயாது’ - அமித்ஷா
புதுடெல்லி, சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் மூலம் சி.ஆர்.பி.எப். வீரர்கள், சத்தீஷ்கார் காவல்துறை, மாவட்ட ரிசர்வ் காவல் படை மற்றும் கோப்ரா படையினர் இணைந்து நடத்திய 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கைக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் அவர் பேசியதாவது;- “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம், இந்தியாவை நக்சல் இல்லாத நாடாக மாற்ற உறுதிபூண்டுள்ளது. நக்சல்கள் அனைவரும் சரணடையும் வரை, அல்லது பிடிக்கப்படும் வரை அல்லது ஒழிக்கப்படும் வரை பா.ஜ.க. அரசு ‘ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்’ நடவடிக்கையின்போது வீரர்கள் வெளிப்படுத்திய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் வரலாற்றில் ஒரு பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும். அச்சுறுத்தல் இருந்தபோதிலும் பாதுகாப்புப் படையினர் மிகுந்த மனஉறுதியுடன் நடவடிக்கையை மேற்கொண்டு ஒரு பெரிய நக்சல் முகாமை வெற்றிகரமாக அழித்தார்கள். கர்ரேகுட்டா மலையில் இருந்த நக்சல்களின் சேமிப்பு கிடங்கு மற்றும் விநியோக சங்கிலி பாதுகாப்பு படை வீரர்களால் அழிக்கப்பட்டது. நாட்டின் வளர்ச்சி குன்றிய சில பகுதிகளில் நக்சல்கள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர். பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை சீர்குலைத்துள்ளனர். நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், பசுபதிநாத் முதல் திருப்பதி வரையிலான பகுதியில் 6.5 கோடி மக்களின் வாழ்க்கையில் ஒரு புதிய சூரிய உதயம் ஏற்பட்டுள்ளது. நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது பலத்த காயமடைந்த பாதுகாப்பு பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் மோடி அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. 2026 மார்ச் 31-ந்தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சல் பயங்கரவாதத்தை ஒழிக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
