இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலா! வருகை தந்ததில் முதலிடத்தில் எந்த நாடு தெரியுமா? - லங்காசிறி நியூஸ்
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது. இலங்கைக்கு சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதன் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியுள்ளதாக அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது. ஆகத்து 2025 இறுதியில் இலங்கைக்கு 1.98 லட்சம் பேர் சுற்றுலாவுக்காக வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது 46,473 பேர் வருகை தந்துள்ளனர். இது மூன்றில் ஒரு பங்காகும். இந்தியாவிற்கு அடுத்து சர்வதேச நாடுகளும் இலங்கை சுற்றுலா வளர்ச்சியில் பங்களிப்பு செய்துள்ளன. பிரித்தானியாவில் இருந்து 17,764 பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 12,500 பயணிகளும் இலங்கைக்கு சுற்றுலாவுக்காக சென்றுள்ளனர். இதன்மூலம் ஐரோப்பிய கண்டத்தில் இலங்கை ஒரு பிரபலமான பயணத் தலமாக உள்ளது என்ற கருத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளது. இவற்றைத் தவிர சீனா, ஜப்பான், நெதர்லாந்து, அவுஸ்திரேலியா, ஸ்பெயின், இத்தாலி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளும் அடங்கும். முந்தைய ஆண்டை விட ஆகத்து 2025 மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை 20.4 சதவீதம் அதிகரித்துள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
