பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் வேண்டாமே.. இசையமைப்பாளர் ரகு வேண்டுகோள்
சென்னை, 'அம்மா அம்மம்மா', 'தரிசு நிலம்', 'மிஸ்டு கால்' போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்தவர் ஏ.வி.எம்.ரகு. தற்போது இளம் தலைமுறையினருக்கு இசைக்குறிப்புகளை பயிற்றுவித்து வரும் ரகு, திரைப்பட பாடல்களில் ஏ.ஐ. தொழில்நுட்பம் பயன்படுத்துவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறும்போது, சமீப காலமாக திரைப்படப் பாடல்கள் மக்கள் மனதில் நிலைத்து நிற்பதில்லை. அப்படி இருக்கையில் தற்போது செயற்கை நுண்ணறிவு என்ற ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தும்போது, திரைப்பட பாடல்களின் தரம் மிகவும் குறைந்துவிடுகிறது. அப்படி உருவாகும் பாடல்களில் ஜீவன் முற்றிலும் இழந்த நிலையில் உள்ளதால், மக்கள் மனங்களில் எவ்விதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, சங்கர்-கணேஷ், கங்கை அமரன் போன்ற மாபெரும் இசையமைப்பாளர்களின் கைவண்ணங்களில் உருவான பாடல்கள் எல்லாம் எக்காலத்திலும் உயிர்ப்புடன் விளங்குகிறது என்றால், அவர்கள் அனைவரும் தங்களது சொந்தமான திறமையாலும், தனித்தன்மையாலும் உருவாக்கப்பட்டதால் தான் காலம் கடந்தும் பேசப்படுகிறது. அதனால், இப்போதுள்ள இசையமைப்பாளர்கள், தயவுசெய்து ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டாம். அவ்வாறு பயன்படுத்தும்போது மூளை மங்கி விடுகிறது. தங்களது சொந்த கற்பனையில் மெட்டமைத்து பாராட்டை அள்ளுங்கள்'', என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
