"வெனஸ்டே சீசன் 2" வெப் சீரிஸின் கடைசி 4 எபிசோடுகள் இன்று வெளியாகிறது
சென்னை, 'வெனஸ்டே' வெப் தொடரின் மூலம் உலகளாவிய புகழை பெற்றவர் ஜென்னா ஒர்டேகா. தற்போது இவர் நடித்துள்ள 'வெனஸ்டே சீசன் 2' நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகி இருக்கிறது. அமெரிக்க 'கார்ட்டூனிஸ்டு' சார்லஸ் ஆடம்ஸ் உருவாக்கிய கதாபாத்திரங்களை கொண்டு எழுதப்பட்ட காமெடி, திரில்லர் வகை தொடர் 'வெனஸ்டே'. இதனை பிரபல இயக்குனர் டிம் பர்டன் இயக்கி இருந்தார். மொத்தம் 8 எபிசோடுகளை கொண்ட இந்த தொடர் கடந்த 2022-ம் ஆண்டு நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியானது. ஜென்னா ஒர்டேகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல், 4 எம்மி விருதுகளையும் வென்றது. தற்போது இதன் 2-வது சீசன் உருவாகி இருக்கிறது. இதில், வெனஸ்டேவாக ஜென்னா ஒர்டேகா, எனிடாக எம்மா மியர்ஸ், பியான்காவாக ஜாய் சண்டே, யூஜினாக மூசா மொஸ்டாபா, அஜாக்ஸாக ஜார்ஜி பார்மர், டைலராக ஹண்டர் டூஹான் , மோர்டிசியா ஆடம்ஸாக கேத்தரின் ஜீட்டா-ஜோன்ஸ், கோமஸ் ஆடம்ஸாக லூயிஸ் குஸ்மான், பக்ஸ்லி ஆடம்ஸாக ஐசக் ஒர்டோனெஸ் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இவர்கள் மட்டுமில்லாமல், சில புதிய முகங்களும் இதில் இடம் பெற்றுள்ளனர். இந்த 2வது சீசனும் 8 எபிசோடுகளை பெற்றுள்ளது. அதில் முதல் 4 எபிசோடுகள் கடந்த மாதம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து மீதமுள்ள 4 எபிசோடுகள் இன்று நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகின்றன.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
