பாலிவுட் சினிமாவில் நடிகைகளுக்கு ‘கவனிப்பு' கிடையாது- கீர்த்தி சனோன் வேதனை
மும்பை, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்பவர், கீர்த்தி சனோன். 'ஹவுஸ்புல்-4', 'ஆதிபுருஷ்', 'க்ரு' உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் கீர்த்தி சனோன், 2021-ம் ஆண்டில் வெளியான 'மிமி' படத்துக்கு தேசிய விருது பெற்றார். இதுதவிர தெலுங்கிலும் பல படங்கள் நடித்துள்ளார். இதற்கிடையில் பாலிவுட் சினிமாவில் ஆணாதிக்கம் மேலோங்கி கிடப்பதாக கீர்த்தி சனோன் வேதனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, ''பாலிவுட் சினிமாவில் நடிகர்களின் ராஜ்ஜியம் தான் நடக்கிறது. படப்பிடிப்பு தளத்தில் நடிகர்கள் வருவதற்காக நடிகைகளும் அதிகாலை முதலே காத்திருக்கிறோம். இங்கு சமநிலை என்பதே கிடையாது. அதற்கு வாய்ப்பும் இல்லை. நடிகர்களுக்கு அட்டகாசமான அறைகளையும், சொகுசு கார்களையும் படக்குழுவினர் ஏற்படுத்தி தருவார்கள். விழுந்து விழுந்து கவனிப்பார்கள். ஆனால் நடிகைகளை அப்படி கண்டுகொள்வதில்லை. சிறிய அறைகளையும், சாதாரண கார்களையும் தருவார்கள். இது மாறவேண்டும். இது நடிகைகளின் மனதில் கொந்தளிப்பாகவே இருக்கிறது'', என்றார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
