நடிகர் நிவின் பாலியின் அடுத்த பட இயக்குனர் யார்?
மலையாளத்தில் வெளியான ‘பிரேமம்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் நடிகர் நிவின் பாலி. இவர், நயன்தாராவுடன் இணைந்து 'டியர் ஸ்டூடன்ஸ்' என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. அதனை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கும் பென்ஸ் படத்தில் நடித்துவருகிறார். இது தவிர தமிழில் நிவின் பாலி, இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ எனும் படத்தில் நடித்துள்ளார். மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் உருவாகி உள்ள இந்த படம் நீண்ட நாட்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், நடிகர் நிவின் பாலியின் அடுத்த படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. அதாவது, இயக்குனர் பி. உன்னிகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்க உள்ளாராம். இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும், இது அரசியல் கதைக்களத்தில் உருவாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
