முதல் 13 பந்தில் 12 ரன்.. அடுத்த 8 பந்துகளில் 7 சிக்ஸ்.. தெறிக்க விட்ட பொல்லார்ட்
டிரினிடாட், கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - செயிண்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற செயிண்ட் கிட்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பொல்லார்டு 65 ரன்களும், பூரன் 52 ரன்களும் அடித்தனர். செயிண்ட் கிட்ஸ் தரப்பில் ஹோல்டர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதில் பொல்லார்டு தான் எதிர்கொண்ட முதல் 13 பந்துகளில் வெறும் 12 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். ஆனால் அடுத்த 8 பந்துகளில் 7 சிக்சர்கள் தெறிக்க விட்ட அவர் வெறும் 21 பந்துகளில் அரைசதம் அடித்தார். குறிப்பாக வக்கார் சலாம்கீல் வீசிய 16-வது ஓவரின் கடைசி 4 பந்துகளை தொடர்ச்சியாக சிக்சருக்கு பறக்க விட்ட அவர் மொத்தம் 29 பந்துகளில் 65 ரன்கள் விளாசினார்.POLLY POWERRR!!! Kieron Pollard raises yet another CPL fifty! #CPL25 #CricketPlayedLouder#BiggestPartyInSport #TKRvSKNP #RepublicBank pic.twitter.com/huJek5r4cLபின்னர் 179 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய செயிண்ட் கிட்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது. பொல்லார்டு ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
