அண்ணனை போன்ற அவர் கொடுத்த ஆலோசனைதான் நான் முன்னேற காரணம் - ஜிதேஷ் சர்மா நெகிழ்ச்சி
பெங்களூரு, அண்மையில் முடிவடைந்த ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றியது. இந்த சீசனில் பெங்களூரு அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ஜிதேஷ் சர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார். குறிப்பாக பினிஷிங் ரோலில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 261 ரன்களை 176 என்ற அதிரடியான ஸ்டிரைக்ரேட்டில் குவித்தார். இதன் காரணமாக எதிர்வரும் ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். ஆசிய கோப்பை தொடரில் அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் பலரும் தம்முடைய பலவீனம் அல்லது தடுமாறும் விஷயங்களில் முன்னேறுமாறு அறிவுறுத்தியதாக ஜிதேஷ் சர்மா கூறியுள்ளார். ஆனால் அண்ணனை போன்ற விராட் கோலி மட்டுமே தம்முடைய பலத்தில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தியதாக அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- “நான் ஒரு சிறிய ஊரில் இருந்து வந்தவன், அங்கு மூத்தவர்களுக்கு அதிக மரியாதை கொடுக்கப்படுகிறது. நீங்கள் சீனியர்களின் சொந்த வாழ்வில் ஊடுருவக்கூடாது. என்னைப் பொறுத்த வரை விராட் கோலியிடம் பேசுவதே பெரிய விஷயம். விராட் பையாவின் உயர்ந்த நிலையை நான் அறிவேன். அதனால் அவரது தனிப்பட்ட விஷயத்தில் தலையிடாமல் அல்லது அவரை தேவையில்லாமல் தொந்தரவு செய்யாமல் இருக்க முயற்சிப்பேன். நான் அவரிடம் கிரிக்கெட் பற்றி மட்டுமே பேசுவேன். மரியாதையின் காரணமாக அவருடன் ஒரு இடைவெளியை கடைப்பிடித்து அர்த்தமுள்ள பேச்சுக்களை மட்டுமே பேச விரும்புகிறேன். மற்றவர்கள் எனக்கு என்ன குறை இருக்கிறது என்று சொல்வார்கள், ஆனால் அவர் என் பலத்தை மேம்படுத்தி, என் விளையாட்டில் எனக்கு அதிக நம்பிக்கையை ஏற்படுத்தினார். இது நான் முன்னேறுவதில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் எனக்குக் கொடுத்த தன்னம்பிக்கையால் களத்தில் 100 சதவீத பங்களிப்பை கொடுப்பது என்னுடைய கடமை என்று நான் உணர்ந்தேன். அவர் எனக்கு ஒரு அண்ணனைப் போன்றவர். என் வாழ்க்கையில் இந்த அண்ணனை தாமதமாகக் கண்டுபிடித்தேன். ஆனால் கண்டுபிடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருடைய அறிவுரைகளை நான் எந்தக் கேள்வியும் கேட்காமல் பின்பற்றுகிறேன்” என்று கூறினார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
