ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு; ஆவலுடன் காத்திருக்கிறேன்: பிரதமர் மோடி பதிவு
பீஜிங், பிரதமர் மோடி ஜப்பான் நாட்டுக்கு 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதற்காக அந்நாட்டுக்கு அவர் நேற்று சென்றார். இதன்பின்னர் தலைநகர் டோக்கியோவில் நடந்த இந்தியா-ஜப்பான் பொருளாதார மன்றத்தில் பங்கேற்று உரையாற்றினார். தொடர்ந்து ஜப்பான் பிரதமர் ஹிகேரு இஷிபாவை சந்தித்து பேசியதுடன், ஜப்பானில் 16 மாகாண கவர்னர்களை சந்தித்து பேசினார். இந்நிலையில், ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அதனை முடித்து விட்டு சீனாவுக்கு புறப்பட்டார். சீனாவின் தியான்ஜின் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு நாளை மற்றும் நாளை மறுநாள் (செப்டம்பர் 1-ந்தேதி) என 2 நாட்கள் நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இந்த மாநாட்டை தொடர்ந்து ரஷிய அதிபரை பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இந்நிலையில் சீனா சென்றடைந்த பிரதமருக்கு அந்நாட்டு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதேபோன்று, அவருக்கு சீனாவில் வசித்து வரும் இந்திய சமூகத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். 2018-ம் ஆண்டுக்கு பின்னர் சீனாவுக்கு சென்றுள்ள பிரதமர் மோடியை வரவேற்கும் வகையில் வந்தே பாரதம் என்றும் மோடி மோடி என்றும் கூடியிருந்த சீன வாழ் இந்தியர்கள் கோஷங்களை எழுப்பினர். அவருடைய வருகையை முன்னிட்டு, இந்தியாவின் பாரம்பரிய நடனம் பயின்று வரும் சீனர்கள் சார்பில் பரதம், கதகளி உள்ளிட்ட நடனங்கள் ஆடப்பட்டன. பாரம்பரிய இசை கருவிகளையும் இசைத்து அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. துறைமுக நகரான தியான்ஜினில் உலக நாடுகளின் தலைவர்கள் திரளாக வருகை தருகின்றனர். சீன அதிபர் ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று, 7 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார். அவர், ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டுக்கு பின்னர் ஜின்பிங்கை சந்தித்து பேச இருக்கிறார். ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, 25 சதவீத கூடுதல் வரி உள்பட அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்துள்ள சூழலில், இந்த உச்சி மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது. இதனை முன்னிட்டு, பிரதமர் மோடி வெளியிட்ட சமூக வலைதள பதிவில், சீனாவின் தியான்ஜின் நகருக்கு வந்து சேர்ந்துள்ளேன். ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் நடைபெற உள்ள விரிவான விவாதங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அதனுடன், பல்வேறு உலக தலைவர்களையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்து உள்ளார்.




காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
