கடந்த ஆண்டை விட மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பு - மும்பை மாநகராட்சி
மும்பை, மும்பையில் பருவ மழைக்கால நோய்களான மலேரியா, டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஜூலை- ஆகஸ்ட் மாதங்களில் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் இரைப்பை குடல் அழற்சி நோய்கள் கடந்த 2 மாதங்களில் குறைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இது குறித்து மும்பை மாநகராட்சி சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- கடந்த ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான 8 மாதத்தில் மும்பையில் 5,706 பேருக்கு மலேரியா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த ஆண்டில் இந்த பாதிப்பு 4,021 ஆக இருந்தது. இதே காலகட்டத்தில் 1,979 ஆக இருந்த டெங்கு பாதிப்பு தற்போது 2,319 ஆக அதிகரித்துள்ளது. இதுபோல் 210 ஆக இருந்த சிக்குன்குனியா பாதிப்பு 485 ஆகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு இதே கால கட்டத்தில் 6,133 பேர் இரைப்பை குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தனர். தற்போது அது 5,774 ஆக குறைந்து உள்ளது. நோய்க்கிருமிகளால் பரவும் நோய்கள் ஆகஸ்ட் மாதத்தில் உச்சத்தை எட்டும். ஆனால் இந்த ஆண்டு இரைப்பை குடல் அழற்சி வழக்குகளில் எந்த அதிகரிப்பும் காணப்படவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
டி20 உலக கோப்பைக்கான தென் ஆப்பிரிக்க அணியில் மாற்றம்
பிக்பாஷ் லீக் தொடரில் இருந்து பாபர் அசாம் விலகல்
2026 டி20 உலகக்கோப்பை தொடர் குறித்து ரோகித் சர்மா நெகிழ்ச்சி பேட்டி
முதல் டி20 போட்டி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்த ஆப்கானிஸ்தான்
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: முதல் சுற்றில் மெத்வதேவ் வெற்றி
