அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் இணைந்த யோகி பாபு
சென்னை, ‘புஷ்பா 2’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுன், தமிழ் இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கானின் 'ஜவான்' படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு அட்லீ இப்படத்தை இயக்க உள்ளார். அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் முதல் படம் இது என்பதால் இதன் மீது அனைவரின் பார்வையும் உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. அல்லு அர்ஜுன், அட்லி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் பட்ஜெட் ரூ.600 கோடி என்கிறார்கள். ஏற்கனவே இதில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனே இணைந்துள்ளார் என அறிவிப்பு வெளியானது. தொடர்ந்து இவர் அல்லாமல் இந்த படத்தில் மிருணாள் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா மற்றும் பாக்ய ஸ்ரீ ப்ரோஸ் உள்ளிட்ட நடிகைகளிடம் இயக்குநர் தரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறதாக தகவல் வெளியாயின. இந்திய சினிமாவில் இப்படியொரு கதைக்களம் வந்ததில்லை என்கிறார்கள். அந்தளவுக்கு ஹாலிவுட் தொழில்நுட்பக் கலைஞர்களுடன் இணைந்து பெரும் பொருட்செலவில் உருவாக்கவுள்ளார் இயக்குநர் அட்லீ. தற்போது இத்திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க யோகி பாபு இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
