கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்திற்கு கூடுதல் திரைகள் ஒதுக்கீடு
துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு கடந்த 28 ம் தேதி வெளியானது.இப்படத்தில், பிரேமலு நடிகர் நஸ்லேன் மற்றும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் சந்து சலிம் குமார், அருண் குரியன் மற்றும் சாந்தி பாலசந்திரன் ஆகியோரும் நடித்துள்ளனர். சூப்பர்வுமன் படமாக உருவாகி இருக்கும் ‘லோகா’ எனும் மலையாளத் திரைப்படம் தமிழிலும் வெளியாகியுள்ளது. இப்படத்தை டோமினிக் அருண் எழுதி இயக்கியுள்ளார். திரைக்கு வந்த இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மர்மங்கள் நிறைந்த கல்யாணி பிரியதர்ஷனின் கதாபாத்திரமும் உருவாக்கமும் ரசிகர்களை மிகவும் கவர்ந்துள்ளது. திரைப்படம் தமிழில் இன்று வெளியானது. இதனை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தமிழ் நாட்டில் வெளியிடுகிறது. இந்நிலையில், கல்யாணி பிரியதர்ஷனின் “லோகா” படத்திற்கு கேரளாவில் 350-க்கும் அதிகமாக திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. திரைப்படம் மக்கள் பலரால் விரும்பப்படுவதால் படத்தின் திரைகள் அதிகரித்துள்ளது. இப்படம் 2 நாட்களில் ரூ 12 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.Experience the Superhero Sensation of the Year #Lokah at big screens near you! #Lokah #TheyLiveAmongUs@DQsWayfarerFilm @dulQuer @dominicarun@NimishRavi@kalyanipriyan@naslen__ @JxBe @chamanchakko @iamSandy_Off @santhybee @AKunjamma pic.twitter.com/nX7gzzfyBz




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
