மேலும் அதிகரித்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
சென்னை, தங்கம் விலை சற்று குறைந்து வந்த நிலையில், பின்னர் விலை உயர்ந்தது. இதன்படி தங்கம் விலை கடந்த மாதம் (ஜூலை) 23-ந் தேதி ஒரு பவுன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி புதிய உச்சத்தை பதிவு செய்தது. அதன் பின்னர் விலை குறைந்து, பின்னர் கடந்த 6-ந் தேதி மீண்டும் விலை உயர்ந்து ரூ.75 ஆயிரத்தை கடந்தது. அதிலும் 8-ந் தேதி ஒரு சவரன் ரூ.75,760 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டது. இதனையடுத்து விலை சரியத் தொடங்கியது. ஒரு பவுன் ரூ.72 ஆயிரம் என்ற நிலைக்கும் சென்றது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறுமுகத்தை நோக்கிய பயணத்தில் இருக்கிறது. இந்த சூழலில் நேற்றும் அதன் விலை உயர்ந்திருந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 355-க்கும், ஒரு சவரன் ரூ.74 ஆயிரத்து 840-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.35-ம், சவரனுக்கு ரூ.280-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 390-க்கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 120-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை கடந்த ஒரு மாதத்தில் 3-வது முறையாக ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்தை தாண்டி இருந்தது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மேலும் அதிகரித்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15-ம், சவரனுக்கு ரூ.120-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்து 405-க் கும், ஒரு சவரன் ரூ.75 ஆயிரத்து 240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று எந்த மாற்றமும் இல்லாமல், ஒரு கிராம் ரூ.130-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:- 28.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,240 (இன்று) 27.08.2025 - ஒரு சவரன் - ரூ.75,120 ((நேற்று) 26.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,840 25.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,440 24.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520 23.08.2025 - ஒரு சவரன் - ரூ.74,520




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
