லண்டன் நோக்கி பறந்த விமானத்தின் மீது மோதிய பறவை: மீண்டும் இலங்கையில் அவசர தரையிறக்கம் - லங்காசிறி நியூஸ்

  இலங்காசிறி
லண்டன் நோக்கி பறந்த விமானத்தின் மீது மோதிய பறவை: மீண்டும் இலங்கையில் அவசர தரையிறக்கம்  லங்காசிறி நியூஸ்

Bird hits Srilankan airlines flight: லண்டன் நோக்கி பறந்த விமானத்தில் பறவை மோதியதை தொடர்ந்து விமானம் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டது. ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL-503 என்ற Airbus A330 ரக விமானம் புதன்கிழமை இலங்கையின் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து லண்டன் நோக்கி புறப்பட்டது.  புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானத்தின் மீது மோதிய பறவை ஒன்று மோதியதை தொடர்ந்து நடுவானில் பரபரப்பு ஏற்பட்டது.ஆனால் விமானி துரிதமாக செயல்பட்டு விமானத்தை கட்டுக்குள் கொண்டு வந்தார். மேலும் பாதுகாப்பு கருதி விமானத்தை மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திலேயே தரையிறக்கினார். இந்த சம்பந்தப்பட்ட விமானத்தில் கிட்டத்தட்ட 269 பயணிகளும், 15 பணியாளர்களும் இருந்தது குறிப்பிடத்தக்கது. விமானம் தரையிறங்கியதும், அதிலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அத்துடன் பயணிகளுக்கு தேவையான அனைத்து கவனிப்புகளையும் ஸ்ரீலங்கன் விமான சேவை மேற்கொண்டது. மேலும் மாற்று விமானம் மூலம் பயணிகளை பிரித்தானியாவின் ஹீத்ரோ விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கும் ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையில், பறவை மோதியதால் பாதிக்கப்பட்ட விமானம் பழுதுபார்ப்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை தெரிவித்துள்ளது.

மூலக்கதை