சவுதியில் இலங்கை தமிழர் அனோஜனுக்கு மரண தண்டனை ரத்து - லங்காசிறி நியூஸ்
saudi court abolish death sentence of sri lankan tamil anojan sivarasa: சவுதி அரேபியாவில் இலங்கை தமிழர் அனோஜனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சவுதி அரேபியாவில் பணியாற்றி வந்த இலங்கைத் தமிழரான சிவராசா அனோஜன், நபிகள் நாயகம் மற்றும் இஸ்லாம் குறித்து சமூக ஊடகத்தில் செய்த கமெண்ட் தொடர்பாக அவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது. இந்த மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென இலங்கை, தமிழ்நாடு மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் குரல் எழுந்தது. இந்நிலையில், அனோஜன் சிவராசவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை சவுதி அரேபியாவின் உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக இலங்கையின் வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா அறிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் தொடர்ச்சியான இராஜதந்திர மற்றும் சட்டரீதியான முயற்சிகளைத் தொடர்ந்து இது சாத்தியமானது என தெரிவித்துள்ளார். மேலும், சவுதி அரேபிய அரசாங்கத்தின் ஒத்துழைப்பிற்கும், நமது தூதர், வெளியுறவு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் அதிகாரிகள், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், மற்றும் இலங்கை, சவுதி சட்டக் குழுக்களின் அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
