இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி கைது - லங்காசிறி நியூஸ்
sri lanka ex first lady Shiranthi Rajapaksa arrested by CIABOC: இலங்கை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் முதல்பெண்மணியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியுமான ஷிராந்தி ராஜபக்ஷ(Shiranthi Rajapaksa), கடந்த செப்டம்பர் 16 ஆம் திகதி தனது கண் தொடர்பான சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார். கடந்த அக்டோபர் 5 ஆம் திகதி அவர் இலங்கை திரும்பிய நிலையில், கிருலபோனிலுள்ள அவரது வீட்டுக்கு இன்று இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகள் சென்றிருந்தனர். சிறிலிய சாவியா நிதியத்துடன் தொடர்புடைய நிதி முறைகேடுகள் குறித்து சுமார் 2 மணி நேரம் அதிகாரிகள் அவரிடம் வாக்குமூலம் பெற்றனர். இதனையடுத்து, ஷிராந்தி ராஜபக்ஷ CIABOC அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முதல்பெண்மணியாக இருந்த ஒருவர் குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
