இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் - கொழும்பில் ராஜ்நாத் சிங் உறுதி - லங்காசிறி நியூஸ்
இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம் என கொழும்பு சென்றுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பேசியுள்ளார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் அரசுமுறை பயணமாக இலங்கைக்கு வருகை தந்துள்ளார். 38 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கை வருகை தந்துள்ளார். கடைசியாக ராஜிவ்காந்தி அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இருந்த கே.சி. பந்த் 1988 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகளுக்காக இலங்கை சென்றார். 2023 ஆம் ஆண்டில் ராஜ்நாத் சிங் இலங்கை வர திட்டமிட்டிருந்த போது, இலங்கை துறைமுகத்துக்கு சீன உளவுக் கப்பல் வந்ததற்கு இந்தியா கடும் அதிருப்தி தெரிவித்ததால் அந்த கொழும்பு பயணம் ரத்தானது. அங்குள்ள இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றிய ராஜ்நாத் சிங், "ஆன்மிகமும் கலாசாரமும் இரண்டறக் கலந்த இலங்கை மண்ணில் உங்களைச் சந்திப்பதில் பெருமையடைகிறேன். தமிழ் மொழி மற்றும் அதன் பண்பாடு, வளர்ச்சி மீது பிரதமர் நரேந்திர மோடியும் நாங்களும் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். நேர்மையான ஆட்சியின் அடையாளமாக நாடாளுமன்றத்தில் "செங்கோல்' நிறுவப்பட்டதும், திருவள்ளுவர், பாரதியாரின் கொள்கைகளை நாடு முழுவதும் கொண்டு சேர்ப்பதும் தமிழ்ப் பாரம்பரியத்துக்கு மத்திய அரசு அளிக்கும் உயர் மரியாதையாகும். இந்தியாவின் எல்லைகள் இன்று முற்றிலும் பாதுகாப்பாக உள்ளன. நாம் யாரையும் முதலில் தாக்க மாட்டோம். ஆனால், நம்மைத் தாக்கத் துணிந்தால் விட்டுவைக்கவும் மாட்டோம் என்ற நமது கொள்கை மிகவும் தெளிவாக உள்ளது. தற்சார்பு பாரதம் திட்டத்தால் இந்தியா சொந்தமாக ஆயுதங்களைத் தயாரிக்கிறது. தமிழகத்தில் அமைக்கப்படும் "பாதுகாப்புத் தொழில்வழித்தடம்' நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கிறது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவு, பகிரப்பட்ட வரலாறு, கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. இன்பத்திலும் துன்பத்திலும் இலங்கையுடன் துணை நிற்போம். மேலும் இரு நாடுகளின் அமைதி, செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு உறுதியுடன் இருக்கிறோம். இரு நாடுகளும் நெருங்கிய கலாச்சார மற்றும் நாகரிகப் பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன. அவை இருதரப்பு உறவின் வளர்ச்சிக்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்கியுள்ளன. 2014 ஆம் ஆண்டில் சுமார் 2 டிரில்லியன் டொலர் மதிப்புடையதாக இருந்த இந்தியாவின் பொருளாதாரம், கடந்த பத்தாண்டுகளில் இரட்டிப்பாகி சுமார் 4 டிரில்லியன் டொலராக உயர்ந்துள்ளது. 2014 ஆம் ஆண்டுக்கு முன்பு 4 நாடுகளுடன் மட்டுமே தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் செய்யப்பட்டிருந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா 38 நாடுகளுடன், 8 முக்கிய நாடுகளுடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் உட்பட, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
