உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லை அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை - லங்காசிறி நியூஸ்
srilanka doctors removed 3.1kg kidney stone: உலகின் மிகப்பெரிய சிறுநீரக கல்லாக 3 கிலோ 100 கிராம் எடையுள்ள கல்லை வெற்றிகரமாக அகற்றி இலங்கை மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். இலங்கையின் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஆண் ஒருவர் பக்கவாதம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் வயிற்றில் ஒரு பெரிய கட்டி இருப்பது தெரிந்துள்ளது. அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் இருப்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதனையடுத்து, ஆரம்பகட்ட பரிசோதனைகளில் அவருக்கு சிறுநீரகக்கல் இருந்தது கண்டறியப்பட்டது. திருகோணமலை மாவட்ட பொது மருத்துவமனையில் கடந்த 14ம் திகதி மருத்துவர் பாலகிருஷ்ணன் பிரகலநாதன் தலைமையிலான குழு அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக சிறுநீரகக் கல்லை அகற்றினர். தற்போது அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர் ஆரோக்கியமான உடல்நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே நபருக்கு 1998ம் ஆண்டில் சிறுநீரக கல்லொன்று சத்திர சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரக கல்லானது 3 கிலோ 100 கிராம் எடையில் இருந்துள்ளது. இதுவே உலகில் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட அதிக எடையுடைய கல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுநீரகக் கல், கின்னஸ் உலக சாதனைக்கு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. 2003 ஆம் ஆண்டு பிரேசிலில் ஒரு நோயாளிடமிருந்து 1.9 கிலோகிராம் மற்றும் நீளம் 17.9 சென்டிமீட்டர் சிறுநீரக கல் அகற்றப்பட்டது. இதுவே இதற்கு முன்பு பெரிய கல்லாக இருந்தது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
