இந்தியாவில் உள்ள புலம்பெயர்ந்தோர் இலங்கை திரும்ப சிறப்பு குடிவரவு ஏற்பாடு - லங்காசிறி நியூஸ்
sri lanka permits migrants return from india : இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இலங்கையில் 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற உள்நாட்டு போர் காரணமாக பாதிக்கப்பட்ட தமிழர்கள், நாட்டில் இருந்து வெளியேறி, உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் முறையான பயண ஆவணங்கள் இன்றி நாட்டை வெளியேறி இந்தியாவில் வசித்து வரும் புலம்பெயர்ந்தோர் மீண்டும் நாடு திரும்புவதற்கான சிறப்பு குடிவரவு ஏற்பாடுகளுக்கு இலங்கை அரசு ஒப்புதல் அளித்துள்ளது. ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர் ஆணையரின் (UNHCR) வழிகாட்டுதலின் கீழ் திரும்பி வருபவர்களுக்கான சட்டரீதியான தடைகளை நீக்குவதே இந்த நடவடிக்கைகளின் நோக்கம் ஆகும். இவ்வ்வாறு நாடு திரும்ப விரும்புவார்கள், 2006 ஜூன் ஒன்றாம் திகதிக்கு முன்னர் இலங்கையை விட்டுச் சென்றிருக்க வேண்டும். இலங்கை தூதரகம் மூலம் அவர் இலங்கையை சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்தியிருக்க வேண்டும். மேலும், அவர்கள் கொலை, தேசத்துரோகம் அல்லது பிற குறிப்பிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகவில்லை என்பதை உறுதி செய்வதற்காக அரச புலனாய்வு சேவையால் பரிசோதிக்கப்படுவார்கள். இந்த பரிசோதனைச் செயல்முறையில் தகுதி பெற்றவர்கள், அங்கீகரிக்கப்பட்ட விமான நிலையம் அல்லது துறைமுகம் வழியாக தற்காலிக கடவுச்சீட்டு மூலம் இலங்கைக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள். அங்கீகரிக்கப்படாத வழிகள் மூலம் வெளியேறியதற்காக, குடிவரவுச் சட்டத்தின் கீழ் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, தமிழ்நாட்டில் உள்ள 108 முகாம்களில் 58,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர். முகாமிற்கு வெளியே காவல்நிலையத்தில் பதிவு செய்து, 34,000 இலங்கைத் தமிழர்கள் தங்கியுள்ளனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
