பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இலங்கை இளைஞர்: திருகோணமலை சாலையில் நேர்ந்த பயங்கரம் - லங்காசிறி நியூஸ்
பிரான்சுக்கு செல்ல தயாராக இருந்த இளைஞர் இலங்கையில் சாலை விபத்தில் உயிரிழந்து இருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இலங்கையின் திருகோணமலை - மூதூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தோப்பூர் - ஜின்னாநகர், 59 ஆம் கட்டை பகுதியில் நேற்று (02ம் திகதி) மாலை ஏற்பட்ட மோசமான மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இளைஞர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் ரிப்பர் வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இந்த கோர விபத்தானது நிகழ்ந்து இருப்பதாக மூதூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சாலை விபத்தில் உயிரிழந்தவர்கள் மூதூர் - கிளிவெட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் செல்வன் தனேஸ் (21) மற்றும் அருணவன் செல்வரெத்தினம் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் ஒருவர் பல்கலைக்கழக மாணவர் என்றும், மற்றொருவர் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல தயாராகி கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சாலை விபத்தை தொடர்ந்து ரிப்பர் வாகனத்தின் சாரதி மூதூர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார். உயிரிழந்த இரண்டு இளைஞரின் உடலும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இந்த விபத்து தொடர்பான கூடுதல் விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
