இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் வாள்வெட்டு தாக்குதல்: பலர் படுகாயம் - லங்காசிறி நியூஸ்
இலங்கையில் கோவில் அன்னதான நிகழ்வில் நடத்தப்பட்ட கொடூர ஆயுத தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.ஏறாவூர் மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் அன்னதான நிகழ்வு நடைபெற்று கொண்டிருந்த போது வாள்வெட்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று பிற்பகல் நடைபெற்ற இந்த வன்முறையில், பெண்கள் உட்பட 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தாக்குதலில் ஈடுபட்ட கும்பலை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். இருப்பினும் மற்றவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. மைலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் கோவிலில் வருடாந்திர உற்சவம் நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்ட போது இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.இந்த நிகழ்வின் போது அன்னதானம் வாங்கி உண்ட இளைஞர் ஒருவர், உணவு சரி இல்லை என தெரிவித்துள்ள நிலையில் அன்னதானம் வழங்கியவர்களுக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 7 பேர் கொண்ட கும்பல் அன்னதானம் வழங்கியர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். மடக்கி பிடிக்கப்பட்ட சந்தேக நபர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
