மேல் நடுத்தர வருமான நாடாக உயர்ந்த இலங்கை - இந்தியாவின் நிலை என்ன? - லங்காசிறி நியூஸ்
இலங்கை கீழ் நடுத்தர வருமானத்திலிருந்து, மேல் நடுத்தர வருமான நாடாக முன்னேறியுள்ளது. உலக வங்கியின் வளர்ச்சித் தரவுக் குழு, முந்தைய நிதியாண்டின் தனிநபர் மொத்த தேசிய வருமான (GNI) மதிப்பீடுகளின்படி நாடுகளின் பொருளாதாரங்களை குறைந்த, கீழ்-நடுத்தர, மேல்-நடுத்தர மற்றும் உயர் என 4 வருமானக் குழுக்களாகப் பிரிக்கிறது. 218 நாடுகளை உள்ளடக்கிய இந்த ஆண்டுக்கான பதிப்பை உலக வங்கி வெளியிட்டுள்ளது. இந்த வகைப்பாடு, ஜூன் 2027 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருக்கும். தனிநபர் மொத்த தேசிய வருமானம் (GNI) 1,136 டொலர் முதல் 4,495 டொலர் வரை உள்ள நாடுகள் கீழ் நடுத்தர வருமானப் பொருளாதாரங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. அதே சமயம் 4,496 டொலர் முதல் 13,935 டொலர் வரை வருமானம் உள்ளவை மேல் நடுத்தர வருமானப் பிரிவில் வருகின்றன. ஒரு நாட்டின் எல்லைகளுக்குள் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் மதிப்பை அளவிடும் GDP போல் இல்லாமல், GNI என்பது, அந்த வருமானம் எங்கிருந்து ஈட்டப்பட்டாலும், ஒரு நாட்டின் குடிமக்கள் மற்றும் வணிகங்களால் ஈட்டப்படும் மொத்த வருமானத்தை அளவிடுகிறது. இந்த வகைப்பாடுகள் எந்தெந்த நாடுகள் சலுகைக் கடன்கள் மற்றும் மேம்பாட்டு உதவிகளைப் பெறலாம் என்பதைத் தெரிவிப்பதோடு, உலகளாவிய பொருளாதார முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் உதவுகின்றன. இதில், இலங்கை, ஜோர்டான், மைக்ரோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகிய 5 நாடுகள் கீழ் நடுத்தர வருமானத்திலிருந்து, மேல் நடுத்தர வருமானத்திற்கு முன்னேறியுள்ளது. டோகோ என்ற ஒரு நாடு குறைந்த வருமானத்திலிருந்து, கீழ் நடுத்தர வருமானத்திற்கு நகர்ந்தது. இலங்கையை ஒரு மீட்சியின் கதை என குறிப்பிட்டுள்ள உலக வங்கி, "2022-ல் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடி நாட்டை வீழ்ச்சியின் விளிம்பிற்குக் கொண்டு சென்ற 3 ஆண்டுகளுக்குப் பிறகு, பல்வேறு தொழில்துறைகளில் ஏற்பட்ட மீட்சி மற்றும் நிதி, சுற்றுலா சேவைகளின் வளர்ச்சியால், 2025-ல் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% வளர்ச்சி கண்டது" என தெரிவித்துள்ளது. மேலும், "நாடு அந்த வரம்பை மிகக் குறைந்த வித்தியாசத்தில் மட்டுமே கடந்தபோதிலும், இந்த மறுவகைப்பாடு மீள்திறனின் ஓர் அடையாளமாகும்," என்றும் தெரிவித்துள்ளது. 2006 ஆம் ஆண்டு வரை குறைந்த வருமான பிரிவில் இருந்த இந்தியா, 2007 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கீழ் நடுத்தர வருமானப் பிரிவிலேயே தொடர்ந்து நீடிக்கிறது.




பூமியை நெருங்கும் வியாழன் கோள்..! வெறும் கண்களால் பார்க்கலாம்
சுவிட்சர்லாந்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் வெடிவிபத்து - பலி எண்ணிக்கை 47ஆக உயர்வு
பாகிஸ்தானுடன் ரூ.6,196 கோடி மதிப்பிலான ஆயுத ஒப்பந்தத்திற்கு அமெரிக்கா ஒப்புதல்
சுற்றுலாவாசியின் தவறால்... சீனாவில் 1,500 ஆண்டுகள் பழமையான கோவிலில் தீ; வைரலான வீடியோ
ஒஹியோ மாகாண கவர்னர் தேர்தல் - இந்திய வம்சாவளியை சேர்ந்த விவேக் ராமசாமிக்கு டிரம்ப் ஆதரவு
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு.. 50 விமானங்கள் ரத்து
திருப்பதியில் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 69 லட்சம்
டெல்லி குடியரசு தினவிழாவில் கம்பீரமாக அணிவகுத்து சென்ற தமிழ்நாட்டு அலங்கார ஊர்தி
டெல்லி கடமை பாதையில் தேசியக்கொடி ஏற்றினார் ஜனாதிபதி திரவுபதி முர்மு
போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - அன்புமணி குற்றச்சாட்டு
ஜல்லிக்கட்டில் வீரர்கள் உயிரிழந்தால் ரூ.10 லட்சம் நிவாரணம்: எடப்பாடி பழனிசாமி உறுதி
பெண்கள்தான் சமூகத்தின் முதுகெலும்பு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு கூடுதல் நிறுத்தம்
சேலம்: பராமரிப்பு பணி காரணமாக 3 ரெயில்கள் ரத்து
